கிருஷ்ணகிரியில் பெரியார் பிறந்தநாள் விழா, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2018-09-18 01:38 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து, பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில விவசாயிகள் அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், அணிகளின் அமைப்பாளர்கள் நாராயணமூர்த்தி, விஸ்வ பாரதி மற்றும் நிர்வாகிகள் அஸ்லம், மகேந்திரன், ரவி, கராமத், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.திப்பனப்பள்ளி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மேற்கு மாவட்ட பொருளாளர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, ஒன்றிய செயலாளர் ரகுநாத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் சதாசிவம், முருகேசன், சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி அவரது படத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு விடுதலை வாசகர் வட்ட தலைவர் நாராயணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் மதிமணியன், மாவட்ட செயலாளர் மாணிக்கம், நகர செயலாளர் தங்கராசன், நகர அமைப்பாளர் வடிவேல், பகுத்தறிவாளர் கழக தலைவர் லூயிஸ்ராஜ், காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ராஜா நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல கிருஷ்ணகிரியில் அரசு கலைக்கல்லூரி, மகளிர் கலைக்கல்லூரி, புதிய வீட்டு வசதி வாரியம், பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை, அரசு ஆஸ்பத்திரி, ராசு வீதி உள்பட பல இடங்களில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஓசூரில், நகர தி.மு.க. சார்பில், பெரியாரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் பெரியார் படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், ஓசூர் நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஓசூர் ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் அருகே நடைபெற்ற விழாவிற்கு, ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் ஜி.பி.கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர துணை செயலாளர் ராஜகோபால் வரவேற்றார். இதில், மாவட்ட பொருளாளர் மாயவன் மற்றும் காங்கிரஸ், சமத்துவ மக்கள் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணத்தில் பெரியார் பிறந்தநாளையொட்டி திராவிடர் கழகம் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக காவேரிப்பட்டணம் காமராசர் பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் படத்துடன் ஊர்வலமாக சென்றனர். இதனை மண்டல செயலாளர் திராவிடமணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில், ஒன்றிய தலைவர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் திருப்பதி, சுப்பிரமணி, மாவட்ட அமைப்பாளர் கதிரவன், மாவட்ட துணை தலைவர் அறிவரசன், தி.மு.க. முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வி.சி.கோவிந்தசாமி மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரை ரவுண்டானாவில் தி.மு.க., திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தை கட்சி இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில், தி.மு.க நகரசெயலாளர் பாபுசிவக்குமார், ஒன்றி செயலாளர் சாமிநாதன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மாலதி நாராயணசாமி, மாவட்ட இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் கருணாநிதி, திராவிடர் கழக பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராயக்கோட்டையில் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் கணேசன் தலைமையில் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில், மேற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சின்னராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்தி அரியப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்