சிறை கைதிகளை விடுவிக்க கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் தொடர் முழக்க போராட்டம்
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் 300க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண் உள்பட 43 கைதிகள் ஆயுள் தண்டனை முடிந்தும் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் மகாத்மாகாந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை போற்றும் வகையில் புதுவை சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவிட விடுதலை கழகத்தினர் சார்பாக தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று காலை தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு திராவிடர் கழக மாநில தலைவர் லோகு அய்யப்பன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ராதாகிருஷ்ணன் எம்.பி., சிவா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாளர் தேவ.பொழிலன், மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களும், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் கைதிகளின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
போராட்ட முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.