பன்வெல் அருகே நெடுஞ்சாலையை கடக்க முயன்றவர் பஸ் மோதி பலி கிராம மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

பன்வெல் அருகே நெடுஞ்சாலையை கடக்க முயன்றவர் பஸ் ேமாதி பலியானார். விபத்துக்கான பஸ் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-16 23:47 GMT
மும்பை, 

பன்வெல் அருகே நெடுஞ்சாலையை கடக்க முயன்றவர் பஸ் ேமாதி பலியானார். விபத்துக்கான பஸ் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பஸ் ேமாதி விபத்து

நவிமும்பை பன்வெல் தாலுகா காலே கிராமத்தை சேர்ந்தவர் லாகு தார்வாடே (வயது55). இவர் நேற்று முன்தினம் காலை 9.15 மணி அளவில் அங்குள்ள மும்பை-கோவா நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, அலிபாக்கில் இருந்து பன்வெல் நோக்கி வந்த சிவ்சாய் பஸ் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் லாகு தார்வாடே தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந் தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித் தனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்ய கோரி அந்த சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மும்பை- கோவா நெடுஞ்சாலை யில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த பன்வெல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் பிரதீப்(54) என்பவரை கைது செய்தனர். மேலும் மறியலில் ஈடுபட்டவர் களை சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.

மேலும் செய்திகள்