கண்டமங்கலம் அருகே கிறிஸ்தவ வழிபாட்டு சபை தீயில் எரிந்து நாசம்
கண்டமங்கலம் அருகே கிறிஸ்தவ வழிபாட்டு சபை தீயில் எரிந்து நாசமானது.;
கண்டமங்கலம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பெரிய காட்ராம்பாக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ பாஸ்டர் பாரதிதாஸ். இவர் கண்டமங்கலம் அருகே கோண்டூரில் உள்ள மனைப்பிரிவு ஒன்றை வாடகைக்கு எடுத்து ‘‘ஜீவ வழி சபை’’ என்ற பெயரில் கிறிஸ்தவ வழிபாட்டு சபையை அமைத்திருந்தார். ஓலைக்கூரையால் அந்த சபை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வழிபாட்டு சபை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. அதுகுறித்து பாஸ்டர் பாரதி தாஸ் கண்டமங்கலம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் யாரோ மர்ம ஆசாமி வழிபாட்டு சபைக்கு தீவைத்துவிட்டதாக தெரிவித்திருந்தார். புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.