விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம்

விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

Update: 2018-09-16 21:30 GMT
விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

மாட்டு வண்டி பந்தயம்

விளாத்திகுளம் அருகே தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, 40 ஆண்டு கால கலை பணி நிறைவு விழா, கட்சியின் 14-ம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்து கொண்டன. இந்த போட்டி சிங்கிலிபட்டியில் தொடங்கி, விளாத்திகுளம் மெயின் ரோட்டில் 8 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.13 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.11 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டன.

சின்னவண்டி

சின்னமாட்டு வண்டி போட்டியில் 16 வண்டிகள் கலந்து கொண்டன. இந்த போட்டி 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.9 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.8 ஆயிரமும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் அழகர்சாமி, விளாத்திகுளம் ஒன்றிய செயலார் தங்கசாமி, புதூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் ரஞ்சித், சிங்கிலிப்பட்டி செயலாளர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்