காக்க காக்க கண்களை காக்க
கண்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவு என்றதும் கேரட்தான் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வரும்.
கேரட் தவிர மேலும் பல உணவுகள் கண்களின் நலன் காப்பதில் பக்கபலமாக இருக்கின்றன. அவைகளுள் முக்கியமானவற்றை பற்றி பார்ப்போம்.
* பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. இது கண்புரை உருவாவதை தடுக்க உதவும்.
* முந்திரி பருப்பில் ஜியாசாந்தின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது விழித்திரைக்கு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புற ஊதா கதிர்வீச்சுகளில் இருந்து கண்களை பாதுகாக்கவும் செய்யும்.
* நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்திருக்கின்றன. உடல் நலத்துக்கு அவசியமான வைட்டமின் ஏ, டி. ஈ. கே போன்றவையும் சேர்ந்திருக்கின்றன. அதிலும் வைட்டமின் ஏ, கண் பார்வைத்திறனை மேம்படுத்துவதிலும், சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
* பசுவின் பால், தயிர் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது. அவை வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் ஆகியவற்றை கொண்டிருக்கின்றன. வைட்டமின் ஏ, கார்னியாவை பாதுகாக்க உதவுகிறது.
* கண்களில் ஏற்படும் அழற்சியை போக்குவதில் பிராக்கோலிக்கு பங்கு இருக்கிறது. துளசி இலைகளை தினமும் மென்று வருவதும் கண்களுக்கு நல்லது.
* முட்டையின் மஞ்சள் கரு, பார்வை திறனுக்கு பலம் சேர்க்கும். ஒமேகா 3, துத்தநாகம், வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துகளும் அதில் உள்ளன.
* நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, ஈ போன்றவைகளும் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
* கண் பார்வையை கூர்மையாக்கும் தன்மை பலாப்பழத்திற்கு உண்டு.
* ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, கண்களின் ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கும். கண்புரையை கட்டுப்படுத்தவும் உதவி புரியும்.
* பப்பாளி பழத்தில் இருக்கும் லூட்டின், ஜியாசாந்தின் ஆகியவை விழித்திரையின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கின்றன.
* மஞ்சளுக்கு பார்வை இழப்பை தடுக்கும் சக்தி இருக்கிறது. விழித்திரைக்கு பாதுகாப்பு கவசமாகவும் மஞ்சள் விளங்குகிறது.