கவர்ச்சி தரும் உதடுகள்

உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதற்கு காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலோர் உதடுகளை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை.

Update: 2018-09-16 11:40 GMT
உலர்ந்த, வெடிப்புகள் கொண்ட மற்றும் சீரற்ற உதடுகள் முக அழகுக்கு பங்கம் விளைவித்துவிடும். வலியையும் ஏற்படுத்தும். மென்மையாக, கவர்ச்சிகரமாக உதட்டு அழகை பராமரிக்கும் வழிமுறைகள்!

* பழைய, இறந்த செல்களால் உதடுகள் கடினமானவோ, உலர்வாகவோ தோன்றும். உதடுகள் ஒருபோதும் உலராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,

* உதடுகள் மிருதுவாகவும், பொலிவாகவும் காட்சியளிப்பதற்கு மென்மையான பிரஷை பயன்படுத்தலாம். தூங்க செல்வதற்கு முன்பாக மென்மையான பிரஷ் மூலம் உதடுகளை இதமாக மசாஜ் செய்வது நல்லது.

* சிறிதளவு சர்க்கரையுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து ஒன்றாக கலந்து உதடுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து அவ்வாறு செய்துவந்தால் உதடுகள் மென்மையாக மிளிரும்.

* சமச்சீரான சத்துணவுகளை சாப்பிட்டால் உதடுகள் பார்க்க அழகாக இருக்கும்.

* உதடுகளில் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு எண்ணெய் வகைகளை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றில் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் கலந்திருக்கின்றன. அவை சருமத்தால் உறிஞ்சப்பட்டு பொலிவை தக்கவைத்துக்கொள்ள துணைபுரியும்.

* சருமம் உலர்வடையும்போது உதடுகளும் பாதிப்புக்குள்ளாகும். சிலவகை லிப்ஸ்டிக்குகள் வாசனை திரவியங்கள் சருமத்துக்கும், உதடுகளுக்கும் ஒத்துக்கொள்ளாது. உதடுக்கான பிரத்யேக கிரீம்களை பயன்படுத்தலாம். அவை புற ஊதாக்கதிர்களிடம் இருந்து உதடுகளை பாதுகாக்கும். 

மேலும் செய்திகள்