வானவில் : ஸ்கல்கேண்டி வயர்லெஸ் புளூடூத் இயர் போன்

செல்போன், ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் மிகவும் அவசியமானது ‘இயர்போன்’. இதை ஸ்மார்ட்போன், செல்போன் தயாரிக்கும் நிறுவனங்களே தயாரித்து அளிக்கின்றன.

Update: 2018-09-12 07:43 GMT
ஸ்கல்கேண்டி என்ற நிறுவனம் விதவிதமான இயர்போன்களை தயாரித்து விற்கிறது. அதில் பூம்-ஹெட்செட்களை போன்று இருக்கும் ‘நாக்-அவுட் ராபின்’ வகை ஹெட்போன்கள் அதிகமாக விற்பனையாகின்றன.

இது புளூடூத் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. மேலும் நெகிழ்வு தன்மையோடு உருவாக்கப்பட்டிருப்பதால், இதை பாக்கெட்டில் மடக்கி எடுத்து செல்ல முடியும்.

இதில் அதிக திறனுள்ள புளூடூத் பொருத்தப்பட்டிருப்பதால் ஸ்மார்ட்போன் வெகு தொலைவில் இருந்தாலும், பாடல்களை கேட்டு ரசிக்க முடியும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை தொடர்ந்து செயல்படும். இதில் பில்ட் இன் மைக் உள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் அழைப்புகளை சுலபமாக இணைத்து, பேச முடியும். மேலும் ரிமோட் மூலமாகவும் அழைப்புகளை ஏற்கலாம்.

இதில் பாடல்களை மாற்றிக்கொள்ளவும், ஒலி அளவை கூட்டி குறைக்கவும் தனித்தனி பட்டன்கள் உள்ளன. மிகச் சிறப்பான இசை கேட்கும் வகையில் இதன் இயர் பட்ஸ் இருப்பதால் விருப்பமான பாடலை கேட்டு மகிழலாம். இதன் விலை ரூ. 3,999. அமேசான் இணையதளத்தில் 20 சதவீத விலை தள்ளுபடியில் ரூ.3,180-க்கு இதை வாங்கலாம். 

மேலும் செய்திகள்