காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும்
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கவேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி சங்கரநாராயணன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.
அப்போது அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த மாவட்ட பொருளாளர் இளங்கோவன் தலைமையில் விவசாயிகள் வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்ரீரங்கம் தாலுகா உத்தமர் சீலி, கவுத்தரச நல்லூர், பனையபுரம், கிளிக்கூடு பகுதிகளில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சுமார் 600 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழைகள் தண்ணீரில் மூழ்கி அழிந்து போய்விட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
எம்.ஜி.ஆர். நற்பணி மன்ற நிறுவன செயலாளர் கண்ணன் என்கிற ராமகிருஷ்ணன் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி சிங்காரத்தோப்பு யானை குளத்தை வணிக வளாகமாக மாற்றுவது, சத்திரம் பஸ் நிலையம் காமாட்சியம்மன் கோவிலை அகற்றி விட்டு பெரிய வணிக வளாகம் கட்டுவது, காந்திமார்க்கெட் முழுவதையும் காலி செய்து விட்டு பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தை நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் நிர்மாணிக்க இருப்பதையும் திரும்ப பெற வேண்டும். பொன்மலை ஜி கார்னர் சுரங்கப்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். டி.வி.எஸ். டோல்கேட் முதல் ஜி கார்னர் வரை உள்ள குறுகலான சேவை சாலையை 12 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யவேண்டும், தமிழ்நாடு அரசு வனத்துறை மூலமாக காவிரி தென்கரை குடமுருட்டி பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
திருச்சி விவசாயிகள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் பழனியாண்டி மற்றும் மாரிமுத்து ஆகியோர் கொடுத்த மனுவில், திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியப்பட்டி அருகே உள்ளது செட்டிய குளம். 1963-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை இந்த குளத்தின் மூலம் சுமார் 150 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்த குளத்திற்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து 14-ம் எண் வரத்து வாய்க்கால் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது செட்டியகுளத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது. அது பாசன குளங்களின் பட்டியலில் கணக்கில் வரவில்லை என கூறிவிட்டனர். செட்டிய குளத்தை மீண்டும் பாசன குளங்களின் பட்டியலில் சேர்க்கவும், அங்கு சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் குளிப்பதற்கு வசதியாக படித்துறைகள் கட்டி தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
தமிழக இந்து மக்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், வருகிற 15-ந்தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட இருப்பதால் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. முசிறி தாலுகா திருத்திய மலை கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வாரி நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி ஓய்வு பெற்ற போலீஸ்காரர் வெங்கட்ராமன் என்பவர் மனு கொடுத்தார்.