விவசாய எந்திர மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.7¼ கோடி நிதி கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மானிய விலை வேளாண் கருவிகள் வழங்குதல், வாடகை மையம் உள்ளிட்ட விவசாய எந்திரமயமாக்கும் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.7¼ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்தார்.;
காஞ்சீபுரம்,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையின் வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் 2018-19 ஆம் நிதி ஆண்டில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண்மை எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம் அமைத்தல் திட்டத்துக்காக காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு ரூ.7¼ கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் டிராக்டர்கள், நெல் நடவு எந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் எந்திரம், விதைக்கும் கருவி, டிராக்டரால் இயங்கும் துகளாக்கும் கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் முதலான வேளாண் எந்திரங்களையும், கருவிகளையும் விவசாயிகள் மானிய உதவியுடன் வாங்கி பயன்பெறலாம்.
அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்றிட விவசாயிகள், விவசாயக் குழுக்கள் அல்லது தொழில் முனைவோர் ஆகியோரால் அமைக்கப்படும் ரூ.25 லட்சம் மதிப்புடைய வேளாண் எந்திரங்கள் உள்ள வட்டார அளவிலான வாடகை மையங்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தில் விவசாய கருவிகள் வாங்கிக் கொள்ள நடப்பாண்டில் ரூ.2 கோடியே 62 லட்சத்து 56 ஆயிரமும், வாடகை மையங்கள் அமைக்க ரூ.4 கோடியே 60 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மானிய விலையில் கருவிகள் மற்றும் எந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கொண்டு விவரங்கள் அறிய செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, காஞ்சீபுரம் (நந்தனம் இருப்பு) மற்றும் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, காஞ்சீபுரம், நந்தனம், மதுராந்தகம் அலுவலகங்களில் அணுகலாம் அல்லது மத்திய அரசின் இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.