டி.டி.வி. தினகரனின் 20 ரூபாய் மந்திரம் மதுரை மக்களிடம் செல்லுபடியாகாது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

டி.டி.வி. தினகரனின் 20 ரூபாய் மந்திரம் மதுரை மக்களிடம் செல்லுபடியாகாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி அளித்தார்.

Update: 2018-09-03 23:15 GMT

மதுரை,

சென்னையில் இருந்து விமானம் மூலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது–

முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா அளித்த திட்டங்கள் அனைத்தும் சிறப்பானவை. இதில் குளங்களில் தூர்வாரும் பணி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வின் திட்டங்கள் அனைத்தும் நேரடியாகவே மக்களுக்கு சென்றடைகிறது. தற்போதுள்ள முதல்–அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்தித்து பேசலாம். எடப்பாடி பழனிசாமி மிகவும் எளிமையானவர்.

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க.வின் கோட்டை. திருப்பரங்குனறம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். ஆர்.கே.நகர் தொகுதியில் வென்றதுபோல், டி.டி.வி. தினகரன் திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற முடியாது. அவருடைய 20 ரூபாய் மந்திரம் மதுரை மக்களிடம் செல்லுபடியாகாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அவர் காரில் புறப்பட்டு அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டிற்கு சென்றார்.

மேலும் செய்திகள்