துபாய் கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேரை ஈரான் கடற்படை சிறைபிடித்தது

எல்லைதாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை ஈரான் கடற்படையினர் கைது செய்து சிறைபிடித்து சென்றனர்.

Update: 2018-09-03 23:00 GMT

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த பாலகுமார்(வயது33), சதீஷ்(22), பூமிநாதன்(26), அலெக்ஸ்பாண்டியன்(21) துரைமுருகன்(25), தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த மில்டன் ஆகியோர் துபாயில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்கள் அனைவரும் சம்பவத்தன்று துபாய் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது அங்கு ரோந்து வந்த ஈரான் கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரையும் கைது செய்து சிறைபிடித்து சென்றனர்.

இதுபற்றி மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தமிழக அரசும், மத்திய அரசும் 6 தமிழக மீனவர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்