நபார்டு வங்கியில் வேலை

நபார்டு வங்கியில் வளர்ச்சி உதவியாளர் (டெவலப்மென்ட் அசிஸ்டன்ட்) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

Update: 2018-09-03 05:43 GMT
தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சுருக்கமாக நபார்டு என்று அழைக்கப்படுகிறது. மும்பையை தலைமை இடமாகக் கொண்டு நாடுமுழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்படும் இந்த வங்கியில் தற்போது வளர்ச்சி உதவியாளர் (டெவலப்மென்ட் அசிஸ்டன்ட்) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 70 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-8-2018-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1983 மற்றும் 1-8-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.450 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 12-9-2018-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.nabard.org/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

மேலும் செய்திகள்