தானேயில் கிருஷ்ண ஜெயந்தி அன்று கோவிலில் ரூ.35 லட்சம் நகைகள் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

தானேயில் கிருஷ்ணர் கோவிலில் ரூ.35 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-02 22:40 GMT
தானே,

தானேயில் கிருஷ்ணர் கோவிலில் ரூ.35 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.35 லட்சம் நகைகள் கொள்ளை

தானே, மெயின் மார்க்கெட் பகுதியில் கிருஷ் ணர் கோவில் ஒன்று உள் ளது. கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி இந்த கோவிலில் உள்ள சாமி சிலை தங்கம் மற்றும் வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று காலை நிர்வாகிகள் கோவிலை திறந்தனர். அப்போது சிலைக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

யாரோ மர்ம ஆசாமிகள் கோவிலுக்குள் புகுந்து சாமி சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகிகள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து கோவிலில் கைரேகை சோதனை நடத்தினார்கள்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர் கோவிலில் தங்க, வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்