மாற்று கட்சியினருக்கு கழக தலைவர் பதவி அரசியல் ஆதாயத்துக்காக பா.ஜனதா வழங்கி உள்ளது

அரசியல் ஆதாயத்துக்காக மாற்று கட்சியினருக்கு கழக தலைவா் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Update: 2018-09-02 22:30 GMT
மும்பை, 

அரசியல் ஆதாயத்துக்காக மாற்று கட்சியினருக்கு கழக தலைவா் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மாற்று கட்சியினருக்கு பதவி

சிவசேனா கட்சியில் இருந்தவர் ஹாஜி அராபத். இவர் சிவசேனா போக்குவரத்து சங்க தலைவராக இருந்தார். இந்தநிலையில் பா.ஜனதா கட்சியில் இணைந்து உள்ள அவருக்கு பா.ஜனதா கட்சி மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமித்து உள்ளது. ஹாஜி அராபத் நேற்று முன் தினம் மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் எம்.எல்.ஏ.வுடன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து ஆசி பெற்றார்.

இதேபோல பா.ஜனதா தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. நரேந்திர பாட்டீலுக்கு அன்னாசாகிப் பாட்டீல் பொருளாதார மேம்பாட்டுகழக சேர்மன் பதவியை வழங்கி உள்ளது.

அரசியல் ஆதாயம்

இவர் ஏற்கனவே முதல்-மந்திரியுடன் பல நிகழ்ச்சிகளில் மேடையை பகிர்ந்து கொண்டவர் ஆவார். இவர் தேர்தல் நேரத்தில் பா.ஜனதாவில் இணைவார் என கூறப்படுகிறது. இந்தநிலையில் அரசியல்ஆதாயத்துக்காக பா.ஜனதா இந்த பதவிகளை வழங்கி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், ‘‘பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி எங்கள் கட்சி உறுப்பினர்களை பா.ஜனதா ஏமாற்றி வருகிறது’’ என்றார்.

மேலும் செய்திகள்