கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த ஒடிசா மாநில தொழிலாளி பலி
கெலமங்கலம் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த ஒடிசா மாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ராயக்கோட்டை,
ஒடிசா மாநிலம் ஜகத்சன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணன்சவுத்ரி (வயது 32). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் தங்கி பைரமங்கலம்-அக்கொண்டப்பள்ளி சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் நிறுவனத்தில் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து வேலை செய்த போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த நாராயணன் சவுத்ரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நாராயணன்சவுத்ரி பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து கெலமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கட்டிடத்தில் இருந்து ஒடிசா மாநில தொழிலாளி தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.