துமகூருவில் நடந்த விபத்துகளில் தனியார் கல்லூரி விரிவுரையாளர் உள்பட 4 பேர் சாவு

துமகூருவில் நடந்த விபத்துகளில் தனியார் கல்லூரி விரிவுரையாளர் உள்பட 4 பேர் உயிர் இழந்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2018-09-02 20:30 GMT
துமகூரு, 

துமகூருவில் நடந்த விபத்துகளில் தனியார் கல்லூரி விரிவுரையாளர் உள்பட 4 பேர் உயிர் இழந்த சம்பவம் நடந்துள்ளது.

கல்லூரி விரிவுரையாளர்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி அருகே நந்திகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சோமசேகர் (வயது 28). இவர், பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர், துமகூரு மாவட்டம் மதுகிரியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். கொரட்டகெரே தேசிய நெடுஞ்சாலை அருகே ரிங் ரோட்டில் சோமசேகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வளைவில் அவர் திரும்பினார்.

இந்த நிலையில், அதே சாலையில் வந்த மோட்டார் சைக்கிளும், சோமசேகரின் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து சோமசேகர் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினார். அதுபோல, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்கள். இதுபற்றி அறிந்ததும் கொரட்டகெரே போலீசார், கிராம மக்கள் விரைந்து வந்து சோமசேகர் உள்பட 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

3 பேர் சாவு

அங்கு 2 வாலிபர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சோமசேகருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்து விட்டார். போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியான வாலிபர்கள் கொரட்டகெரே அருகே பலவனஹள்ளியை சேர்ந்த அர்ஷித்(20), அவரது நண்பரான நவீன்குமார்(24) என்று தெரிந்தது.

இதுபோல, துமகூரு புறநகர் மல்லசந்திராவை சேர்ந்தவர் பரமேஸ்வர்(35), தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்தார். நேற்று காலையில் அவர் வெளியே சென்றுவிட்டு சித்தார்த்நகர் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த ஒரு லாரி மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பரமேஸ்வர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்துகள் பற்றி கொரட்டகெரே மற்றும் துமகூரு புறநகர் போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்