விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் சீறிப்பாய்ந்த காளைகள்

விளாத்திகுளம் அருகே கோவில் கொடைவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி உள்பட 4 மாவட்ட காளைகள் சீறிப்பாய்ந்து பங்கேற்றன.;

Update: 2018-09-02 22:00 GMT

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே கோவில் கொடைவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி உள்பட 4 மாவட்ட காளைகள் சீறிப்பாய்ந்து பங்கேற்றன.

கோவில் கொடை விழா

விளாத்திகுளம் அருகே உள்ள பெத்தனாட்சி அம்மன், முனியசாமி கோவில் கொடைவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு நேற்று காலை விளாத்திகுளம்– சூரங்குடி ரோட்டில் பெரிய மாட்டி வண்டி மற்றும் சிறிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, நெல்லை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. ஏராளமான காளைகள் கலந்து கொண்டு சீறிபாய்ந்தன.

பெரிய மாட்டு வண்டி

பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் சிங்கிலிபட்டியை சேர்ந்த சங்குசாமிக்கு முதல் பரிசான ரூ.25 ஆயிரத்து 1–ம், நெல்லை மாவட்டம் மருகால்குறிச்சியை சேர்ந்த சுப்பம்மாளுக்கு 2–ம் பரிசான ரூ.20 ஆயிரத்து 1–ம், மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த மோகனசாமி குமாருக்கு 3–ம் பரிசான ரூ.15 ஆயிரத்து 1–ம் வழங்கப்பட்டன.

சிறிய மாட்டு வண்டி

தொடர்ந்து நடந்த சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 29 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற விளாத்திகுளத்தை சேர்ந்த ஆறுதல் ஏசுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரத்து 1–ம், மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த மோகன்சாமி குமாருக்கு 2–ம் பரிசான ரூ.13 ஆயிரத்து 1–ம், கம்பத்துப்பட்டியை சேர்ந்த வீர சின்னராசுக்கு 3–ம் பரிசான ரூ.11 ஆயிரத்து 1–ம் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தை காண சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர். ஏற்பாடுகளை சூரங்குடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்