காரில் போலியாக அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி வந்தவர் கைது
சென்னை அபிராமபுரத்தில் வாகன சோதனையின் போது சிக்கிய காரில் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கி, கைவிலங்கு பறிமுதல் செய்யப்பட்டது. காரில் போலியாக அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
அடையாறு,
சென்னை அபிராமபுரம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மனித உரிமை பத்திரிகையாளர் சங்கம், மத்திய சமுக நீதி அமைச்சகம், இந்திய அரசு (கவர்மெண்ட் ஆப் இந்தியா), குற்றம் மற்றும் லஞ்ச ஒழிப்பு சங்கம் என பல்வேறு ‘ஸ்டிக்கர்கள்’ ஒட்டிய ஒரு கார் வந்தது.
சந்தேகத்தின் பேரில் அந்த காரை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது காரில் போலியாக அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டது தெரியவந்தது. காரில் இருந்தவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால் போலீசார் அந்த காரை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் காரை முழுமையாக சோதனை செய்த போது அதில் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கி, கைவிலங்கு இருந்தது.
இதையடுத்து இந்த வழக்கு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இது குறித்து அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழக்குப்பதிவு செய்து அந்த காரை ஓட்டி வந்த அதன் உரிமையாளரான அபிராமபுரத்தை சேர்ந்த ரவிசங்கரை (வயது 49) கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.