திருட வந்ததாக கூறி கட்டி வைத்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மலப்புரம் மாவட்டம் அருகே திருட வந்ததாக கூறி கட்டி வைத்ததால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-09-02 21:45 GMT

கோட்டயம்,

மலப்புரம் மாவட்டம் கோட்டங்கல் பகுதியை சேர்ந்த முஸ்தபா மகன் முகமது ஹாஜி (வயது 23). கூலித்தொழிலாளி. கடந்த 31–ந்தேதி அதிகாலை இவர் அந்த பகுதி வழியாக நடந்து வந்தார். அவர் திருட வந்ததாக கூறி, அப்பகுதி மக்கள் அவரை பிடித்து கட்டி வைத்தனர். அப்போது சிலர் அவரை செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முஸ்தபா அங்கு வந்து அவரை மீட்டு சென்றார்.

இச்சம்பவத்தால் மனமுடைந்து காணப்பட்ட முகமது ஹாஜி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கோட்டங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்