மீன்: வளர்க்கலாம்.. ருசிக்கலாம்.. சம்பாதிக்கலாம்.
மீன் வளர்ப்பில், நன்னீர் மீன் வளர்ப்பு என்பது மிக எளிமையானது. இம்முறை மீன் வளர்ப்பு உள்நாட்டு பகுதிகளில் அமைந்துள்ள குளம், குட்டை, ஏரிகள், பாசனக் குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
சொந்த நிலத்தில் வெட்டி அமைக்கப்பட்ட குளங்களிலும் இந்த முறையில் மீன்களை வளர்க்கலாம். 6 மாத காலம் மற்றும் அதற்கும் கூடுதலான காலம் நிலைத்திருக்கும் நீர்நிலைகளில், இம்முறையில் மீன் வளர்க்கலாம். நன்னீர் மீன் வளர்ப்பு முறைகளில் ‘கூட்டு மீன் வளர்ப்பு’ என்பது பிரசித்திபெற்றது. அது பற்றி பார்ப்போம்!
அங்ககக் கழிவுப்பொருட்கள், உரச்சத்துக்கள், நுண்தாவர மிதவைகள், நுண் விலங்கின மிதவைகள், நுண்பாசிகள், மட்கும் கழிவுகள் போன்றவை நீரில் உருவாகுகின்றன. அவைகளில் இருந்து அடிமட்ட சிறு உயிரினங்கள் மற்றும் நுண்ணுயிரினங்கள், நீர் நிலைகளில் வெவ்வேறு மட்டங்களில் இயற்கையாகவே உருவாகின்றன. அவைகளை சிலவகை மீன் இனங்கள் உணவாக்கிக்கொள்கின்றன.
குளங்களில் இயற்கையாகவே உற்பத்தியாகும் உணவு வகைகளை உண்ணும் தன்மை கொண்ட, வேகமான வளர்ச்சியும் மாறுபட்ட உணவுப்பழக்கமும் கொண்ட பல பெருங்கெண்டை மீன் இனங்களை ஒரே குளத்தில் தேவைக்கேற்ற விகிதாச்சாரங்களில் இருப்புச்செய்து, அங்குள்ள இயற்கை உணவு வகைகளை பிரதானமாகப் பயன்படுத்தி பெருமளவு மீன்களை வளர்ப்பதே, கூட்டு மீன் வளர்ப்பின் அடிப்படைத் தத்துவமாகும்.
இம்முறையில் கட்லா, ரோகு, மிர்கால் போன்ற இந்தியப் பெருங்கெண்டை மீன் இனங்களையும், வெள்ளிக்கெண்டை, போட்லா, புல்கெண்டை, சாதாக்கெண்டை ஆகிய ெவளிநாட்டு பெருங்கெண்டை இனங்களையும் வளர்க்கலாம். இம்முறையில் நீர்நிலையிலே உருவாகும் இயற்கை உணவுகள் தவிர தவிடு, கடலைப் புண்ணாக்கு, தானியங்கள் சேர்க்கப்பட்ட மேலுணவையும் மீன்களுக்கு வழங்கலாம். அதன் மூலம் அதிக மீன் உற்பத்தி பெற வாய்ப்பிருக்கிறது.
கூட்டுமீன் வளர்ப்பிற்கு பள்ளமான வயல் பகுதிகளிலும், வண்டல், மணல், களிமண் கலந்த மண்தன்மை கொண்ட இடங்களிலும் சொந்தமாக குளம் அமைத்துக் கொள்ளலாம். நீர்க்கழிவு ஏற்படும் மண்தன்மை கொண்ட இடங்களில் குளங்களை அமைத்தால் அதிக அளவில் நீர் விரயம் ஏற்படும். இதனைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அதிக முதலீட்டு செலவினை ஏற்படுத்தும்.
மீன் வளர்ப்புக் குளங்களை ½ ஏக்கர் முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாக செவ்வக வடிவில் அமைத்துக் கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட குளங்களிலும் மீன்கள் நன்றாக வளரும் என்ற போதிலும் சொந்தக் குளங்களை அதிகப்பரப்பளவில் அமைக்கும்போது வேறுபல பிரச்சினைகள் ஏற்படும். கரைக்குத் தேவையான அளவு மண்ணை மட்டும் தோண்டி எடுத்து கரைகள் அமைத்து குளத்தை உருவாக்கிடலாம். இதனால் குளம் அமைக்கும் செலவு குறையும். அவ்வாறு செய்தால் உரிமையாளர் இடத்திலுள்ள மண்ணும் பண்ணையை விட்டு வெளியேற்றப்படுவதில்லை.
வண்டல் பொறுக்குகளை அகற்றிய பிறகு குளத்தின் தரைப்பகுதியை ஆழமாக குறுக்கும் நெடுக்குமாக உழவு செய்யவேண்டும். அதன் மூலம் குளத்தின் தரைப்பகுதி நல்ல காற்றோட்ட வசதி பெறும். அங்குள்ள நச்சுத்தன்மைகளும் குறைந்திடும். அதன் பின்னர், குளம் அமையும் மண்ணின் காரத்தன்மைக்கேற்ப சுண்ணாம்பு இடவேண்டும். சுண்ணாம்புச்சத்து மீன் வளர்ப்பிற்கு இன்றியமையாததாக இருப்பதால், மீன்வளர்ப்பு குளங்களில் சுண்ணாம்புச்சத்து சேர்க்கப்படுகிறது.
குளத்து நீர் மற்றும் மண்ணின் கார அமில நிலைக்கேற்ப குளங்களுக்கு அக்ரிலைம், டோலோமைட், நீர்த்த சுண்ணாம்பு, கிளிஞ்சல் சுண்ணாம்பு ஆகியவற்றுள் ஒன்றோ அல்லது ஜிப்சமோ இடப்படுகிறது. அங்கு இடவேண்டிய சுண்ணாம்பின் அளவினை மண் பரிசோதனைக்கு பின்னர் வல்லுனர்கள் முடிவுசெய்வார்கள்.
குளங்களுக்கு சுண்ணாம்பு இட்டு நீர் நிறைக்கப்பட்ட பிறகு அடி உரம் இடப்படுகிறது. அடி உரத்தின் அளவு மீனின் வளர்ப்பு முறை, வளர்ப்பு காலம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். பொதுப் பரிந்துரையாக குளங்களுக்கு குப்பை நீக்கப்பட மக்கிய அல்லது புதுச்சாணம் ஏக்கருக்கு ½ முதல் 1 டன் அளவிற்கு கரைசலாக இடப்படுகிறது. பின்னர் ரசாயன உரங்கள் கரைக்கப்படுகின்றன. பொதுப்பரிந்துரையாக ஏக்கருக்கு அடிஉரமாக யூரியா 12 முதல் 14 கிலோவும், சூப்பர் பாஸ்பேட் 16 முதல் 18 கிலோவும், பொட்டாஷ் 2½-3 கிலோவும் இடப்படுகிறது.
நாட்பட்ட குளங்களுக்கு நுண்ணூட்ட உரங்களும் அளிக்கவேண்டும். சாணம் மற்றும் ரசாயன உரமிட்ட 40 தினங்களுக்கு பின்னர் குளத்து நீரின் நிறம் பச்சை கலந்த பழுப்பு நிறமாக மாறும். அப்போது மீன் குஞ்சுகளை இருப்புச் செய்யவேண்டும். மீன் குஞ்சுகளில் இனவிகிதாச்சாரம் மற்றும் இருப்படர்த்தி, அந்த குளத்தின் சூழல் மற்றும் வளர்ப்புக் காலம் ஆகியவற்றுக்கேற்ப மாறுபடும்.
மீன் குஞ்சுகளின் இருப்படர்த்தி ஏக்கருக்கு 1500 முதல் 4000 வரை மாறுபடுகிறது. குறைந்த காலம் நீர் நிற்கும் குளங்களில் குறைந்த எண்ணிக்கையிலும், அதிக காலம் நீர் நிற்கும் குளங்களில் அதிக எண்ணிக்கைகளிலும் மீன் குஞ்சுகளை இருப்புச்செய்யலாம். அதே வேளையில் தரமான தீவனத்தை முழுமையாக அளித்து வளர்க்கும் குளங்களில் மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கலாம். சுமார் 10 மாத காலம் மீன் வளர்க்கும் குளங்களில் ஏக்கருக்கு 2000 முதல் 3000 மீன் குஞ்சுகளை இருப்புச்செய்யலாம்.
இனவிகிதாச்சாரத்தைப் பொறுத்தவரையில் சொந்தமாக அமைக்கப்பட்ட குளங்களில் கட்லா, ரோகு, மிர்கால், புல்கெண்டை ஆகிய இனங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் பொதுகுளங்களில் அவற்றுடன் சேர்த்து சாதாக்கெண்டை இனத்தையும் இருப்புச்செய்யலாம். போட்லா இனம் வேகமாக வளரும் தன்மை கொண்டதாக இருப்பினும் அதற்கு விற்பனை வாய்ப்புகள் இல்லாததால் மீன்வளர்ப்போர் விரும்புவதில்லை.
பொதுவாக குளத்தில் கட்லா 15 முதல் 20 விழுக்காடு வரையிலும், ரோகு 40 முதல் 50 விழுக்காடு வரையிலும், மிர்கால் 20 முதல் 30 விழுக்காடு வரையிலும், புல்கெண்டை அதிகபட்சமாக 5 விழுக்காடு வரையிலும் இருப்புச் செய்யப்படுகின்றன. உரச்சத்துக்கள் மற்றும் கழிவுகள் சேரும் பொதுகுளமாக இருந்தால் மிர்கால் மற்றும் சாதாக்கெண்டை இனங்களை மொத்தம் 30 முதல் 35 விழுக்காடு வரையில் இருப்புச் செய்யலாம்.
3 அங்குல நீளத்திற்கும் கூடுதலாக வளர்ந்த மீன் குஞ்சுகளை இருப்புச்செய்வது சிறந்தது. மேலும் முந்தைய ஆண்டு உற்பத்தியான மீன் குஞ்சுகளை ஒரு வருடம் ஸ்டாக் வைத்திருந்து அவற்றை மறு வருடம் இருப்புச் செய்வது மீன்களில் வேகமான வளர்ச்சியைக் கொடுக்கும்.
குளங்களில் மீன் குஞ்சுகளை இருப்புச்செய்த பிறகு அவை அங்கு உற்பத்தியாகி உள்ள இயற்கை உணவுகளை உண்டு வளரும். இயற்கை உணவு இனங்களின் அளவு குறையும் போது நீரிலுள்ள பச்சை நிறம் வெளிறி காணப்படும். இத்தகைய அறிகுறி தென்படும்போது குளங்களுக்கு மேலுரமிட்டு இயற்கை உணவு உற்பத்தியை பெருக்கவேண்டும். குளத்தயாரிப்பின்போது இட்ட அடிஉர அளவினை 3 முதல் 4 பங்குகளாகப் பிரித்து, ஒவ்வொரு பங்கினையும் வாரம் ஒருமுறை என 4 வாரங்களில் குளங்களுக்கு மேலுரமாக இடலாம். மேலுரம் போடும் போது சாணத்தை பைகளில் கட்டி தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக கரையுமாறு செய்ய வேண்டும்.
மீன்கள் நன்கு வளர்ந்த நிலையில் இருக்கும்போது பெருமளவு சாணத்தை ஒரே நேரத்தில் தண்ணீரில் கரைப்பது குளங்களில் பிராணவாயு பற்றாக்குறையை ஏற்படுத்தும். தவிர, மேலுரம் கரைப்பது என்பது நீரின் நிறத்தையும் அடர்த்தியையும் பொறுத்து அமையும். குளங்களில் உரச்சத்துக்களின் அளவு அதிகரிக்கும்போது நீரின் நிறம் அடர்பச்சையாகவும், நீரின் மேல் பகுதியில் பாசி படர்வுகள் அல்லது கசடுகள் மிதப்பது போலவும் காட்சியளிக்கும். எனவே நீரின் நிறம் பார்த்து தேவை அறிந்து மேலுரம் இடவேண்டும்.
குளங்களுக்கு தொடர்ந்து உரமிடுவது, நீரில் இயற்கை உணவு வகைகளை உற்பத்தி செய்வதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய இயற்கை உணவினங்களின் உற்பத்தி ஆண்டு முழுவதும் ஒரே சீராக இருப்பதில்லை. அது கோடைகாலங்களில் மிக வேகமாகவும், மழை மற்றும் பனிக் காலங்களில் மெதுவாகவும் நடைபெறுகிறது. மேலும் சாணம் போன்ற உரங்களை குளங்களுக்கு தொடர்ச்சியாக அதிக அளவில் இட்டு வந்தால் குளத்து நீரின் தரம் குறைந்து மாசுபடும்.
எனவே அடிஉரம் போட்ட பிறகு, குளங்களில் உரங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு வேளாண் இடு பொருட்களைக் கலந்து மேலுணவு தயாரித்து மீன்களுக்கு அளிக்கவேண்டும். அவ்வாறு அளித்தால் அதிக மீன் உற்பத்தியை பெறலாம். நல்ல தரமான எண்ணெய் நீக்கப்பட்ட அரிசித்தவிடு, கடலைப்புண்ணாக்கு, சோயா மாவு, சிறுதானிய மாவு ஆகியவை மீன்களுக்கு மேலுணவு தயார் செய்வதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களாகும்.
மீன்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு 30 விழுக்காடு புரதச்சத்து கொண்ட உணவு தேவை. முன்கூறப்பட்ட மூலப்பொருட்களில் கடலைப்புண்ணாக்கு மற்றும் சோயா மாவு ஆகியன முக்கிய புரதச்சத்து ஆதாரங்களாகும். எனவே தீவனத்தில் அவற்றின் விகிதாச்சாரம் 30 முதல் 50 விழுக்காடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
மீன்கள் சிறிய குஞ்சுகளாக இருக்கும் போது தீவனத் தயாரிப்பில் 50 விழுக்காடு அளவிற்கு கடலைப்புண்ணாக்கு, சோயா மாவு சேர்த்துக் கொள்ளலாம். மீன்கள் வளரும்போது கடலைப் புண்ணாக்கு, சோயாமாவின் அளவை 40 விழுக்காடு, 30 விழுக்காடு என்று படிப்படியாக குறைக்கவேண்டும்.
தீவனத்துடன் உயிர்ச்சத்து மற்றும் தாதுஉப்புக் கலவையை சுமார் 1 விழுக்காடு அளவிற்கு சேர்த்து அளிப்பது நல்ல பலனை கொடுக்கும். மேலுணவு தினமும் மீன்களுக்கு அவசியம். மீன்கள் வளர்ச்சி பெறும்போது உணவு விழுக்காட்டின் அளவு குறைந்தாலும், தினசரி அளிக்க வேண்டிய மேலுணவின் அளவு அதிகரித்து வரும். ஒரு நாளைக்கு அளிக்க வேண்டிய மேலுணவின் அளவினைக் கணக்கிட்டு அதனை இருபங்குகளாகப் பிரித்து காலை 7 ½ முதல் 8 மணி வாக்கில் ஒரு வேளையும், மாலை 5 மணி வாக்கில் இன்னொரு வேளையும் அளிக்கவேண்டும். இதனால் உணவின் தேவை அதிகரிக்கும்.
மீன்களின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மீன்களை பிடித்து பார்க்கவேண்டும். இழுவலை போட்டு மாதிரி மீன்பிடிப்பு நடத்துவது நல்லது. இதன் மூலம் மீன்களின் எடை மற்றும் ஆரோக்கியத்தைக் கண்காணித்து தகவல்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நீரின் தரத்தை நன்கு பராமரிக்க 3 முதல் 4 அடி ஆழத்தில் குளங்களில் நீர் மட்டத்தை பராமரிப்பது நல்லது. குளத்து நீர் அடர்பச்சையாகவும் கசடு நிறைந்ததாகவும் மாறிவிடாமல் தேவையறிந்து உணவு மற்றும் உரமிட்டு வந்தால் நீரின் தரத்தை பாதுகாக்கலாம்.
கோடை காலத்தில், குளங்களுக்கு அதிகாலை வேளைகளில் சென்று குளங்களில் மீன்களின் புழக்கத்தை கண்காணிக்க வேண்டும். காலை வேளைகளில் மீன்கள் கூட்டமாக நீரின் மேல்மட்டத்திற்கு வந்தால், அவை சுவாசிக்க போதுமான பிராணவாயு குளத்தில் இல்லை என்பதை புரிந்துகொள்ளலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் புதிதாக நீர்பாய்ச்சலாம். குளத்தில் உரங்கள் இடுவதை தவிர்க்கலாம். தீவனத்தின் அளவை சற்று குறைத்துக் கொள்ளலாம். மேலும் வளர்ந்த மீன்களை அறுவடை செய்து, குளத்தில் மீன் இருப்பைக் குறைக்கலாம்.
இவ்வாறு அறிவியல் முறைகளை பயன்படுத்தி மீன் வளர்ப்பினை முறையாகக் கையாண்டால், ஆண்டிற்கு ஒரு ஏக்கர் குளத்தில் 1½ முதல் 2 டன் மீன்களை உற்பத்தி செய்து, ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை நிகர வருவாய் பெறலாம். இதுதவிர, குளக்கரையில் தென்னை, வாழை, தீவனப்புல் மற்றும் காய்கறிப் பயிர்களை பயிர்செய்து உபரி வருவாயும் பெற வாய்ப்பு இருக்கிறது.
(தொடரும்)
கட்டுரை-: பேராசிரியர்கள் குழு, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்.

குளங்களை மீன் வளர்க்கத் தயார் செய்யும்போது பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் குளத்தின் தரைப்பகுதியை நன்கு வெடிக்குமளவிற்கு காயவிடவேண்டும். பின்பு வெடித்த குளத்தரைப் பகுதியிலிருந்து வண்டல் கழிவுகளை அகற்றவேண்டும். அதிகளவில் குளங்களில் உரச்சத்து சேருவது மீன் வளர்ப்பின் போது பல இடர்பாடுகளை ஏற்படுத்தும். எனவே வண்டல் வடிவில் இருக்கும் உரக்கழிவுகளை ஆண்டுதோறும் குளங்களிலிருந்து அப்புறப்படுத்துவது குளங்களில் நீரின் தன்மைகளை நல்லமுறையில் பராமரித்திட உதவும்.