அரசுப்பள்ளிகளில் அறிவுக்களஞ்சியம்
மாணவ-மாணவிகளிடையே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்துவதற்காக அரசு பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கும் முயற்சியில் ஒடிசாவை சேர்ந்த மாணவர் குழு ஒன்று இயங்கி கொண்டிருக்கிறது.
புவனேஸ்வரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு நூலகங்களை கட்டமைக்க அவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். இதுவரை 23 நூலகங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 100 நூலகங்களை அமைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் ‘மிஷன் 100 நூலகம்’ என்ற பெயரில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
‘‘ஒடிசா மாநிலத்தில் 34 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் நூலகங்கள் இல்லை. நூலகங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் அடிப்படை கல்வி அறிவை மேம்படுத்துவது கேள்விக்குறியாக இருக்கிறது. அரசாங்க பள்ளிக்கூடங்களில் சிறிய அளவில் நூலகங்களை ஏற்படுத்தினாலும் அது அந்த பகுதியில் சமூக மாற்றத்தை உருவாக்கும். பழங்குடியின பள்ளிகள் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் நிலையில் இல்லை. அவர்களுக்கு நாங்கள் வழங்கும் புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும். 100 நூலகங்களுடன் எங்கள் இலக்கு முடிவடையபோவதில்லை’’ என்கிறார்கள், நூலக மாணவர் குழுவினர்.
இவர்கள் அனைவரும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் படிப்பவர்கள். ஏழை மாணவர்கள் படிப்பை தொடர்வதில் இருக்கும் சிரமங்களை அறிந்து, அவர்கள் கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்கில் 2015-ம் ஆண்டு புத்தகம் வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் குறைந்தபட்சம் 500 புத்தகங்களை சேகரித்து வழங்குகிறார்கள். அதில் ஒடியா, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த புத்தகங்களை வைத்து பராமரிக்க நூலகங்களையும் உருவாக்கிவிட்டார்கள். இந்த மாணவர்கள்தான் அரசு பள்ளிக்கூடங்களில் முதன் முதலாக நூலகங்களை அமைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நூலகம் அமைப்பதற்கு இவர்களுக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அதற்கான நிதி திரட்டுவதுதான் சவாலான விஷயமாக இருக்கிறது. நூலக திட்டத்திற்காக மாணவர்களிடமும், ஊர் மக்களிடமும் பணத்தை பெறுகிறார்கள்.