கும்மிடிப்பூண்டி, ஒதப்பையில் அம்மா திட்ட முகாம்
கும்மிடிப்பூண்டி, ஒதப்பையில் அம்மா திட்ட முகாம் நடந்தது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியில் அம்மா திட்ட முகாம் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், வருவாய் ஆய்வாளர் கந்தசாமி, கிராம நிர்வாக அதிகாரி பாக்கியம் சர்மா, முன்னாள் வார்டு உறுப்பினர்கள் கேசவன், அர்ச்சுனன், தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் முதியோர் உதவித்தொகை தொடர்பாக 40 மனுக்களும், இதர மனு ஒன்று என மொத்தம் 41 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 6 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ்களை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலாஜி வழங்கினார். முன்னதாக பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் கோபி வரவேற்றார். முடிவில் மகேஷ் நன்றி கூறினார்.
ஒதப்பை
ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். துயர் துடைப்பு தாசில்தார் லதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இந்த முகாமில் சாதி சான்று, வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன்கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 45 பேர் துயர் துடைப்பு தாசில்தார் லதாவிடம் மனுக்களை அளித்தனர். அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர் பூங்குழலி, கிராம உதவியாளர் ஸ்ரீபிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.