தாராவியில் பட்டப்பகலில் பயங்கரம் வாலிபர் கத்தியால் குத்தி கொலை நண்பர் கைது

தாராவியில் பட்டப்பகலில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-01 22:55 GMT
மும்பை, 

தாராவியில் பட்டப்பகலில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் கொலை

மும்பை தாராவி பகுதியை சேர்ந்தவர் ரயிஸ் சையத் (வயது18). இவர் நேற்று மதியம் 1 மணியளவில் தாராவி அபுதயா வங்கி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 17 வயது வாலிபர் ஒருவர் ரயிஸ் சையத்தை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் ரயிஸ் சையத்தை மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் நடத்திய சோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

கைது

இந்தநிலையில் ரயிஸ் சையத்தை கொலை செய்த வாலிபர் சாகுநகர் போலீசில் சரணடைந்தார். சாகுநகர் போலீசார் அவரை தாராவி போலீசில் ஒப்படைத்தனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாராவி போலீசார் 17 வயது வாலிபரை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட ரயிஸ் சையத்தும், 17 வயது வாலிபரும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ரயிஸ் சையத், மைனர் வாலிபரை கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மைனர் வாலிபர் அவரை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்