மகாடாவில் வீடு தருவதாக கூறி 30 பேரிடம் பணமோசடி; அதிகாரி உள்பட 3 பேர் கைது

மகாடாவில் வீடு தருவதாக கூறி 30 பேரிடம் பண மோசடியில் ஈடு பட்ட அதிகாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-01 22:30 GMT
மும்பை, 

மகாடாவில் வீடு தருவதாக கூறி 30 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்ட அதிகாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீடு தருவதாக மோசடி

மும்பையில் மலிவு விலையில் மகாடா நிறுவனம் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இங்கு வீடு வாங்க விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கப் பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சிலர், அதிகாரிகளின் உடந்தையில் மகாடாவில் வீடு வாங்க விண்ணப்பித்தவர்களிடம் பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றி வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

அதிகாரி உள்பட 3 பேர் கைது

இந்த புகார் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மகாடாவில் அதிகாரி யாக பணிபுரிந்து வரும் கைலாஷ் (வயது49) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விண்ணப்பதாரர் களிடம் மகாடா வீடு தருவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அதிகாரி கைலாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் மகாடாவில் வீடு தருவதாக கூறி மொத்தம் 30 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்