நாமக்கல், ராசிபுரத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
பாலிசிதாரர்களுக்கு வழங்கும் போனசை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல், ராசி புரத்தில் முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்,
நாமக்கல்லில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை அட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். பொருளாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பாலிசிதாரர்களுக்கு வழங்கும் போனசை உயர்த்த வேண்டும் என்பது உள்பட முகவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி முகவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் பாலிசி பிரீமியத்தின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வழங்கப்பட்டு இருக்கும் கால அவகாசத்தை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பதோடு, லாபத்தில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்தனர். முடிவில் இணை செயலாளர் விஜயபாணி நன்றி கூறினார்.
ராசிபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கத்தினர் கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பாலிசி தாரர்களுக்கு வழங்கும் போனசை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ராசிபுரம் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கத் தலைவர் கோபிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்று பேசினார். பொருளாளர் பி.டி.எம்.ராஜேந்திரன், துணைத் தலைவர் தம்பி என்கிற சண்முகசுந்தரம் இணைச் செயலாளர்கள் துரைசாமி, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் கோட்டத் துணைத் தலைவர் மாணிக்கம், சேலம் கோட்ட முன்னாள் பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். முகவர்கள் பன்னீர்செல்வம், பெரியசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் முகவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
வருகிற 15-ந் தேதி எல்.ஐ.சி. நிர்வாகம் நடத்தும் இன்சூரன்ஸ் வார விழா உள்ளிட்ட அனைத்து கூட்டங்களையும் புறக்கணிப்பது, வருகிற 7-ந் தேதி வரை கோரிக்கைகள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து எல்.ஐ.சி. அலுவலகங்களில் பணிகளை செய்வது, 15-ந் தேதி வரை கோரிக்கைகளை வலியுறுத்தி பாலிசிதாரர்கள், பொதுமக்கள், முகவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முகவர்கள் தெரிவித்தனர்.