மைனர் பெண்ணை கற்பழித்து தாயாக்கினார் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தார்வார் கோர்ட்டு தீர்ப்பு

மைனர் பெண்ணை கற்பழித்து தாயாக்கிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2018-09-01 21:45 GMT
உப்பள்ளி, 

மைனர் பெண்ணை கற்பழித்து தாயாக்கிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

காதல்

தார்வார் தாலுகா அகலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 26). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இவருடைய மனைவி மேல்படிப்புக்காக பெலகாவியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ஜேம்ஸ் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கும் தார்வாரை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஜேம்ஸ், முதல் திருமணத்தை மறைத்து மைனர் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. இதனால் அந்த மைனர் பெண் கர்ப்பமானார்.

வாலிபர் கைது

இந்த நிலையில், மைனர் பெண்ணுக்கு உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளும்படி ஜேம்சிடம் வற்புறுத்தி உள்ளார். ஆனால் ஜேம்ஸ், தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், உன்னை திருமணம் செய்ய முடியாது என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மைனர் பெண், வித்யாகிரி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், முதல் திருமணத்தை மறைத்து என்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கற்பழித்து தாயாக்கிய ஜேம்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் வித்யாகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜேம்சை கைது செய்தனர். பின்னர் அவர் மீது தார்வார் 4-வது கூடுதல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

7 ஆண்டு சிறை

இந்த வழக்கு தார்வார் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி சித்தப்பா தீர்ப்பு வழங்கினார். அதில், ஜேம்ஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதால் அவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

அபராத தொகையில் ரூ.50 ஆயிரத்தை குழந்தைக்கும், ரூ.40 ஆயிரத்தை மைனர் பெண்ணுக்கும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்