தபால் நிலையத்தில் வங்கி சேவை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு தபால் நிலையத்தில் வங்கி சேவையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
நாடு முழுவதும் தபால் நிலையங்களின் பயன்பாடு குறைந்து வந்தது. எனவே இதை கருத்தில் கொண்டு தபால் நிலையங்களை புத்துயிர் பெறச் செய்யும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது. செல்வமகள் சேமிப்பு திட்டம், ஓய்வூதிய திட்டம், விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் தபால் நிலையங்கள் மூலமாக செயல்பட தொடங்கின.
இந்த நிலையில் தபால் நிலையங்களை மேலும் நவீனப்படுத்தும் விதமாக இந்திய போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி (இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி) என்ற சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த சேவையை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்த சேவை தொடங்கப்பட்டது.
இதே போல குமரி மாவட்டத்திலும் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம், மணிமேடை தபால் நிலையம், மருங்கூர் துணை தபால் நிலையம், இரவிபுதூர் மற்றும் குமாரபுரம் தோப்பூர் கிளை என மொத்தம் 5 தபால் நிலையங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் மணிமேடை தபால் நிலையத்தில் இந்திய போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி சேவையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு தபால் துறை சார்பில் இந்து கல்லூரியில் விழா நடந்தது. விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். விழாவில், தென் மண்டல தபால் துறை தலைவர் வெண்ணம் உபேந்தர், கன்னியாகுமரி தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் விபி சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்திய போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி சேவையை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் தொடங்கி வைத்த விழா காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.