மக்களுடைய குறைகளை போக்குவதே அ.தி.மு.க. அரசின் லட்சியம் எடப்பாடி பழனிசாமி பேச்சு
விவசாயிகளுக்கு எப்போதும் துணை நிற்போம் என்றும், மக்களுடைய குறைகளை போக்குவதே அ.தி.மு.க. அரசின் லட்சியம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம்,
கிராமப்புற மக்களுடைய வாழ்வாதாரம் முன்னுக்கு வரவேண்டும், கிராமத்தில் இருக்கின்ற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்க பெறவேண்டும், அதுதான் ஜெயலலிதாவின் அரசினுடைய லட்சியம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நகரத்திலே வாழ்கின்ற மக்களுக்கு என்ன அடிப்படை வசதிகள் கிடைக்கின்றதோ, அதேபோல, கடைக்கோடியில் இருக்கின்ற கிராமத்திலே வாழ்கின்ற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரம் சிறக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆட்சியினுடைய திட்டம்.
நானும் கிராமத்திலே பிறந்து வளர்ந்தவன், நான் ஒரு விவசாயியாக இருந்தவன், இன்றைக்கும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றேன். ஆகவே, விவசாயிகளுடைய பிரச்சினை எந்த அளவிற்கு கடினமானது என்பதை நான் உணர்ந்தவன். அதேபோல விவசாயத் தொழில் எந்த அளவிற்கு சிரமம் என்பதையும் நன்கு அறிவேன். விவசாயப் பணியில் ஈடுபட்டிருப்பது எவ்வளவு துன்பம், கஷ்டம் என்பதையும் நான் நன்கு அறிவேன், எந்தத் துறையிலும் இவ்வளவு கஷ்டம் கிடையாது. வெயிலிலே, மழையிலே நனைந்து பணியாற்றக்கூடியவன் விவசாயத் தொழிலாளி.
ரத்தத்தை வேர்வையாக மண்ணிலே சிந்தி உழைக்கின்றவன் விவசாயி. ஆகவே, உழைக்கின்ற விவசாயிகளுடைய நலன் மேம்பாடு அடைய, அந்த விவசாயிகளுக்கு இந்த அரசு என்றென்றைக்கும் துணை நிற்கும், அவர்களுக்கு தேவையான திட்டங்களை வகுத்து அளிக்கும். எல்லா பகுதிகளிலும் விவசாயிகள் முன்னுக்கு வரவேண்டும், விவசாயிகள் செழிப்பாக இருந்தால், நாடு செழிப்படையும், அந்த செழிப்பான நிலை இந்த ஆட்சியிலே கிடைக்கும்.
மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், நோட்டு, கொண்டு செல்வதற்கு பை, பள்ளிக்குச்செல்வதற்கு சைக்கிள், அறிவுபூர்வமான கல்வி கிடைப்பதற்கு மடிக்கணினி அத்தனையையும் கொடுத்தது இந்த அரசு. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இதுபோன்று கிடையாது. விவசாயத்திலும் சரி, கல்வியிலும் சரி இரண்டையும் இரண்டு கண்களைப் போல் இந்த அரசு காத்து நிற்கின்றது. இரண்டு துறையும் செழிக்க தொடர்ந்து பாடுபடுவோம்.
எல்லா துறைகளும் இன்றைக்கு வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றது. இந்திய அளவிலேயே வேளாண்மைத் துறை சிறந்து விளங்குகின்ற காரணத்தினால், உணவு தானிய உற்பத்தியில் தேசிய விருதைப் பெற்றிருக்கிறோம்.
மக்களுடைய குறைகளை போக்குவதே என் லட்சியம், அதற்காக அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபடும். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் முன்னுக்கு வர, கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு அடிப்படை தேவை வழங்க இந்த அரசு தொடர்ந்து பாடுபடும்.
இவ்வாறு அவர் பேசினார்.