சேலத்தில் கோர விபத்து தனியார் பஸ் மீது ஆம்னி பஸ் மோதியதில் புதுமாப்பிள்ளை உள்பட 7 பேர் பலி
சேலத்தில் தனியார் பஸ் மீது ஆம்னி பஸ் மோதிய கோர விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தினர் ஆவார்கள்.
சேலம்,
சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூட்டுக்காரன்தோப்பு பகுதியை சேர்ந்த தனசேகர் (வயது 43) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது.
இந்த சாலையோரம் பூ ஏற்றும் சரக்குவேன் ஒன்று பஞ்சராகி நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தனியார் பஸ் வேன் மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு மறுபுறம் உள்ள சாலைக்கு சென்றது. அப்போது பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு ஆம்னிபஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ஆம்னி பஸ், எதிரில் நிலைதடுமாறி வந்த தனியார் பஸ் மீது அதிவேகமாக மோதியது.
விபத்தில் தனியார் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. ஆம்னி பஸ் நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பஸ்சின் இருக்கைகள் கழன்று வெளியே விழுந்தன. கண்ணாடிகள் முற்றிலும் உடைந்து சாலை முழுவதும் பரவிக்கிடந்தது. படுகாயம் அடைந்த பயணிகள் கூக்குரலிட்டு கதறினர். சரக்கு வேனும் உருக்குலைந்தது. நள்ளிரவு 2 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், துணை போலீஸ் கமிஷனர் தங்கதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பஸ்களிலும் இருந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். பின்னர் ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியானவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து நடந்த இடம் போர்க்களம் போன்று காட்சி அளித்தது. இதனிடையே தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் கிரேன் மூலம் விபத்தில் சிக்கிய பஸ்களை மீட்டனர். நள்ளிரவு நேரம் என்பதால் இறந்தவர்கள் யார்?, காயமடைந்தவர்கள் யார்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.
இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் பெயர் விவரம் தெரியவந்தது. அவர்களின் விவரம் வருமாறு:-
ஆம்னி பஸ்சில் பயணம் செய்த கேரள மாநிலம் ஜரிகம்பள்ளியை சேர்ந்த ஜிம் ஜேக்கப் (58), புதுமாப்பிள்ளையான ஆலப்புழை தாளவாடியை சேர்ந்த ஷானுதரியன் (28), கேரள மாநிலம் திருச்சூர் எடக்குளம் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் (66), அவருடைய மனைவி அல்போன்சா (61), இவர்களின் மகள் டினு ஜோசப் (32), அவருடைய கணவர் சிஜி வின்சென்ட் (35), கேரள மாநிலத்தை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் ராமு (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இந்த விபத்தில் தனியார் பஸ் டிரைவர் தனசேகர், கிருஷ்ணகிரியை சேர்ந்த ஸ்ரீதேவி (37), ரஜினி (41), கேரளாவை சேர்ந்த தீபக், ஜெகன் உள்பட 40 பேர் காயமடைந்தனர். இதில் தனசேகரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே விபத்தில் பலியான கேரள மாநிலத்தை சேர்ந்த பயணிகள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுடன் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளும் சேலத்திற்கு விரைந்து வந்தனர். பலியானவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினார். டாக்டர்களிடம் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள், மருமகன் என 4 பேர் இறந்த நிலையில், 3 வயது சிறுவன் ஈதன் மட்டும் உயிர் தப்பினான். அவன் ‘அம்மா, அம்மா’ என்று கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இதையடுத்து அந்த சிறுவனை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். உறவினர்கள் வந்ததும் அவர்களிடம் அந்த சிறுவனை ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
விபத்தில் இறந்த ஷானுதரியனுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. அவருடைய மனைவி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் தற்போது சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் பலியானவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் பெங்களூவில் தங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் ஊருக்கு திரும்பும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.