ஊட்டச்சத்து குறைபாடு உயிரிழப்புகளை தடுக்க பழங்குடியின பகுதிகளில் அறிவியல் ரீதியிலான ஆய்வு

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பழங்குடியின பகுதிகளில் அறிவியல் ரீதியிலானஆய்வுகள் மேற்கொண்டு அதன்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசுக்கு, ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

Update: 2018-08-31 23:51 GMT
மும்பை, 

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பழங்குடியின பகுதிகளில் அறிவியல் ரீதியிலானஆய்வுகள் மேற்கொண்டு அதன்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசுக்கு, ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு உயிரிழப்புகள்

மராட்டியத்தில் ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக விதர்பா மண்டலத்தில் உள்ள மால்கேத் உள்பட மாநிலத்தில் பழங்குடியின மக்கள் வாழும் மற்ற பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதுகுறித்து பல்வேறு வழக்குகள் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஓகா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அறிவியல் ஆய்வு

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஓகா கூறியதாவது:-

பழங்குடியின பகுதிகளில் ஏற்படக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடு உயிரிழப்புகளை தடுக்க அரசு திறமையான நிபுணர் குழுக்கள் அமைத்து சுதந்திரமான அறிவியல் ரீதியிலான ஆய்வு மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும். குறிப்பாக ஐ.ஐ.டி. அல்லது டி.ஐ.எஸ்.எஸ். போன்ற நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்கள் அப்பகுதிகளுக்கு சென்று அங்கு நிலவும் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சினைகள் குறித்து புரிந்துகொள் ளவேண்டும். மேலும் அதை சரிசெய்வதற்கான ஆலோசனைகளை வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

50 வயதுக்கு முன் உயிரிழப்பு

இதேபோல் பூர்ணிமா உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்த மனுவில், குழந்தைகள் அல்லாமல் பெரியவர்களும் இப்பகுதியில் உட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள் ளதாக கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், “ ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிறுவயதில் இருந்தே உடல் நலக்குறைவால் அவதிப்படும் பலர் 50 வயதை எட்டும் முன்பே உயிரிழந்து விடுகின்றனர்.

இந்த பிரச்சினையை எதிர்கொள்ள அரசு கொள்கையை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்” என்றனர்.

மேலும் செய்திகள்