அவுரங்காபாத்தில் மனைவி, 2 மகள்களை கொன்று வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி, 2 மகள்களை கொலை செய்துவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2018-08-31 22:35 GMT
அவுரங்காபாத்,

மனைவி, 2 மகள்களை கொலை செய்துவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 உடல்கள் மீட்பு

அவுரங்காபாத் புலாம்பிரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா தியோரே (வயது32). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு சுவர்னா (6), ஹிந்தாவி (4) என்ற 2 மகள்கள் இருந்தனர். நேற்று முன்தினம் இவர்களின் வீடு வெகுநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் சுகன்யா மற்றும் 2 மகள்கள் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கிருஷ்ணா தியோரே வீட்டின் மின்விசிறில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.

போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை, தற்கொலை

விசாரணையில், கிருஷ்ணா தியோரே அவரது மனைவி மற்றும் மகள்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கிருஷ்ணா தியோரேயின் விபரீத முடிவிற்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அவுரங்காபாத் புறநகர் போலீஸ் எஸ்.பி. ஆர்த்தி சிங் கூறுகையில், குடும்ப பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என நினைக்கிறோம். எனினும் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

மனைவி, மகள்களை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவுரங்காபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்