முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 5-வது மதகில் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு ராடுகள், சங்கிலிகள் அகற்றம்
முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 5-வது மதகில் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு ராடுகள், சங்கிலிகள் பாதுகாப்பு கருதி அகற்றப்பட்டன.
ஜீயபுரம்,
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 45 மதகுகள் உள்ளன. இதில் 6-வது மதகில் இருந்து 14-வது மதகு வரை உள்ள 9 மதகுகள் கடந்த 22-ந் தேதி இரவு திடீரென்று இடிந்து விழுந்தன. இதனால் கொள்ளிடம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறியது. உடைந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி ரூ.95 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக 1-வது மதகில் இருந்து 17-வது மதகு வரை 220 மீட்டர் தூரத்துக்கு 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கி தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அணையின் முன்பாக கான்கீரிட் சுவர் அமைத்தல், மதகு உடைந்த இடங்களில் பாறாங்கற்களை கொண்டு நிரப்புதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் மதகுகள் உடைந்த இடத்தில் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் கடும் சவால் ஏற்பட்டுள்ளது. இதற்காக முக்கொம்பு கொள்ளிடம் அணை சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அணை உடைந்த இடத்தில் மிகவும் ஆழமாக இருப்பதால் அங்கு பாறாங்கற்கள் கொண்டு நிரப்பும்போது, அவை உள்ளே இறங்கி விடுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ராணுவ உதவி கோர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கொள்ளிடம் அணையின் 6-வது மதகில் இருந்து 14-வது மதகு வரை மட்டுமே உடைந்துள்ள நிலையில் நேற்று பாதுகாப்பு கருதி 5-வது மதகில் பொருத்தப்பட்டு இருந்த மதகை ஏற்றி, இறக்க பயன்படக்கூடிய (கியர் பாக்ஸ்) இரும்பு ராடுகள், சங்கிலிகள் மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் உத்தரவின்பேரில் தொழிலாளர்கள் அகற்றினார்கள்.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் வருவதால், காவிரியில் 1,700 கனஅடியும், கொள்ளிடத்தில் 2,300 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருவதால் இனி, பணிகள் துரித வேகத்தில் நடைபெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.