காட்கோபர் - மான்கூர்டு லிங் ரோட்டில் 430 ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் இடித்து அகற்றம்
காட்கோபர் - மான்கூர்டு லிங் ரோட்டில் 430 ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
மும்பை,
காட்கோபர் - மான்கூர்டு லிங் ரோட்டில் 430 ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றம்
மும்பை காட்கோபர் - மான்கூர்டு லிங் ரோடு பகுதியில் உள்ள இடத்தை ஆக்கிரமித்து அதிகளவு குடிசை வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.
இதையடுத்து நேற்று மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காட்கோபர் - மான்கூர்டு லிங் ரோடு பகுதியில் கட்டப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
430 வீடுகள்...
மொத்தம் அங்கு இருந்த 430 வீடுகள் இடித்து அகற்றப்பட்டதாக மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. முன்னதாக வீடுகளை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கூடுதல் போலீசாா் அங்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன.