சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை நேற்று கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-31 21:00 GMT
சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை நேற்று கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பட்டாடைகட்டி பஞ்சாயத்து. இங்கு பட்டாடைகட்டி, சந்திரகிரி, தட்டான்குளம், தர்மத்தூரணி, சர்க்கரைகுளம், வென்றிலிங்கபுரம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில் தட்டான்குளத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

இதுகுறித்த அறிந்த பட்டாடைகட்டி கிராம மக்கள், பஞ்சாயத்து அலுவலகத்தை பட்டாடைகட்டியில் கட்ட வேண்டும் என்று கூறி, சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

பரபரப்பு

இதுகுறித்து தாசில்தார் ராஜேந்திரனிடம் அவர்கள் கூறுகையில், பட்டாடைகட்டி கிராமம் பஞ்சாயத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் பட்டாடைகட்டியில் தான் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளன. எனவே புதிதாக கட்டப்பட உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தையும் எங்கள் கிராமத்திலேயே அமைக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்