ஓசூரில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சாகச நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தினமும் சாகசம் செய்து செல்கிறார்கள்.
ஓசூர்,
இளைஞர்களின் இத்தகைய ஆபத்தான இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்துகொண்டு செல்லும் போது அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இந்த ஆபத்தான பயணத்தை போலீசார் கண்டு கொள்வதே இல்லை. இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சாகசம் செய்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இனியாவது விபத்துகள் ஏற்படும் வகையிலும் மற்றும் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கி ஆபத்துக்கள் நிகழாத வண்ணம் காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், நகர காவல் துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.