ரவுடி காக்காதோப்பு பாலாஜி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
ரவுடி காக்காதோப்பு பாலாஜியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
சென்னை,
சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் 1 ஆண்டு சிறையில் அடைத்து வருகிறார்கள்.
ரவுடி காக்காதோப்பு பாலாஜி (வயது 38) உள்ளிட்ட 9 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டார். காக்காதோப்பு பாலாஜி மீது 8 கொலை வழக்குகள் உள்பட 50 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே அவர் 8 முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.