ஜோலார்பேட்டை அரசு மகளிர் பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்பு

‘பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்’ என ஜோலார்பேட்டை அரசு மகளிர் பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

Update: 2018-08-30 23:30 GMT
ஜோலார்பேட்டை, 

ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில், ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் விசாலாட்சி தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர் ராதிகா வரவேற்றார். இதனையடுத்து ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் வாசிக்க ஆசிரியர்கள், மாணவிகள் வீட்டிலோ, அலுவகத்திலோ பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டேன், துருப்பிடிக்காத எக்கு பாத்திரங்கள் மற்றும் சணல் பைகளை பயன்படுத்துவேன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ஏற்படும் சுகாதார குறைபாடுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், பிளாஸ்டிக் மாற்று பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என உறுதிமொழி எடுத்தனர்.

இதில் பள்ளி ஆசிரியர் ஜெயலட்சுமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் உமாசங்கர், மேலாளர் நிஷாத்பேகம், பொறியாளர் கோபு, துப்புரவு ஆய்வாளர் ரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்