டோம்பிவிலியில் ஆண் நண்பரின் வீட்டில் பெண் பிணமாக மீட்பு

டோம்பிவிலியில் ஆண் நண்பரின் வீட்டில் பெண் பிணமாக மீட்கப்பட்டார். ஆண் நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-08-30 22:33 GMT
தானே, 

டோம்பிவிலியில் ஆண் நண்பரின் வீட்டில் பெண் பிணமாக மீட்கப்பட்டார். ஆண் நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் மாயம்

தானே மாவட்டம் டோம்பிவிலி, மான்பாடா பகுதியை சேர்ந்த பெண் ஹர்ஷதா (வயது29). கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் மான்பாடா போலீசில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பிணமாக மீட்பு

இதில், அவர் அதே பகுதியில் உள்ள ஆண் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு கடைசியாக சென்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த வீட்டின் கதவை தட்டினர். வெகுநேரமாக தட்டியும் கதவை யாரும் திறக்கவில்லை.

இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஹர்ஷதா வீட்டிற்குள் பிணமாக கிடந்தார். போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பியோடிய பெண்ணின் நண்பரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்