கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமணம் ஓ.பன்னீர்செல்வம்–அமைச்சர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினர்

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமணம் நேற்று நடந்தது. இதில், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Update: 2018-08-30 22:00 GMT

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமணம் நேற்று நடந்தது. இதில், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமணம்

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ–இந்திராகாந்தி தம்பதியர் மகன் அருண்குமாருக்கும், சென்னை தினகரன்–சாந்தி தம்பதியர் மகள் திவ்யாவுக்கும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று காலையில் திருமணம் நடந்தது. துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ–இந்திராகாந்தி, அமைச்சர் கடம்பூர் ராஜூவின் தந்தை செல்லையா ஆசிரியர், ரவிகுமார்–காயத்ரி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். தொடர்ந்து கோகுலம் மண்டப வளாகத்தில் மணமக்களை வாழ்த்தும் நிகழ்ச்சி நடந்தது.

அமைச்சர்கள்

விழாவில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தொழில் துறை அமைச்சர் சம்பத், தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் பாண்டியராஜன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி, ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், கைத்தறி துறை அமைச்சர் பாஸ்கரன், சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி,

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம், ஐகோர்ட்டு நீதிபதி தாரணி, ஐகோர்ட்டு அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், கோவில்பட்டி சப்–கோர்ட்டு நீதிபதி பாபுலால், மாவட்ட கலெக்டர்கள் சந்தீப் நந்தூரி (தூத்துக்குடி), ஷில்பா (நெல்லை), தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன்,

அ.தி.மு.க.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாநில இளைஞர் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை, மாநில மாணவர் அணி துணை செயலாளர் சோலை கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், மோகன், ராஜேந்திரன், மார்க்கண்டேயன், சின்னப்பன், கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் சென்னம்மாள் ராமசாமி, நிர்வாக இயக்குனர் கே.ஆர்.அருணாசலம், செயலாளர் சங்கரநாராயணன், ராம்கோ சிமெண்ட் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் ராஜா,

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, கோவில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ராமானுஜ ஜீயர், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர், கூடுதல் இயக்குனர் எழில் அழகன், இணை இயக்குனர்கள் முத்துசாமி, செல்வராஜ்,

நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நகர தலைவர் மைக்கேல் அமலதாஸ், நற்பணிமன்ற வேலாயுதபுரம் தலைவர் முருகன், கம்மவார் சங்க தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், செயலாளர் ஜெனரேஷ், பொருளாளர் சிவகுமார், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ், இனாம் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார், லாரி அதிபர் மாரிச்சாமி, மகாலட்சுமி கல்வி அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர்,

தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முத்துராஜ், நீதிராஜன், கண்ணன், ஜெகன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கணேஷ் பாண்டியன், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், செண்பகமூர்த்தி, வேலுமணி, ஆபிரகாம் அய்யாத்துரை, தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு, தொழில் அதிபர் விக்னேசுவரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்