நல்லம்பள்ளியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நல்லம்பள்ளியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-30 22:45 GMT
நல்லம்பள்ளி,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மதலைமுத்து தலைமை தாங்கினார். ராஜேஸ்வரி, மகேஸ்வரி, லில்லிபுஷ்பம் கிருஷ்ணமூர்த்தி, காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர் துரை ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்ற கூட்ட தொடரில் 110-விதியின்கீழ் அறிவித்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகளை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட, ஒன்றிய, வட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைத்தலைவர் செல்வி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்