திறன் வளர்ப்பு பயிற்சி-வேலை வாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2018-08-30 22:15 GMT
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு- பயிற்சி துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திறன் பயிற்சி மூலம் சந்தையில் நிலவும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் மற்றும் வேலைக்காக தங்களை தயார்படுத்திக்கொள்வது பற்றி எடுத்துரைக்கப்படுகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாந்தோன்றி ஒன்றியம் தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழ்களுடன் தனியார் துறையில் வேலை வாய்ப்பும் பெற்றுத்தரப்படும். இப்பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பயணப்படி நாள் ஒன்றுக்கு ரூ.100 வழங்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்