மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே அடிப்படை சட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும் நீதிபதி பேச்சு
மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என நீதிபதி பத்மா பேசினார்.
அருமனை,
அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சட்ட விழிப்புணர்வு மன்ற தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு சார்பு நீதிபதியும், குழித்துறை வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான பத்மா தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் வின்சென்ட் வரவேற்று பேசினார். நீதிபதி பத்மா, விழிப்புணர்வு மன்ற பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
சட்டம் ஒரு குழந்தையை கருவில் இருந்தே பாதுகாக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கூறுவதும், அதை கேட்பதும் குற்றம். குழந்தைகளை கடத்தல், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை போன்ற சம்பவங்களுக்கு கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சட்ட பாதுகாப்பு வழங்குகிறது.
மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது, ஹெல்மெட் அணிவது, சாலை பாதுகாப்பு போன்ற சட்டங்களை தெரிந்து இருக்க வேண்டும். இதன்மூலம் சிறு வயதில் குற்றங்கள் செய்யாமல் வாழலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, நீதிபதிகள் ரேணுகாதேவி, ரெத்தினவேல் பாண்டியன், சண்முகராஜ், அப்துல்சலாம், நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகனன் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் நீதிபதி பத்மா பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கம்ப்யூட்டர் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். மேலும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
முடிவில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) இந்திரா குமாரி நன்றி கூறினார். இதில் பள்ளி மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.