நெல்லை மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

Update: 2018-08-30 00:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

மண்பாண்ட தொழிலாளர்கள்

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக நெல்லை மாவட்டத்தில் 42 பேருக்கு ரூ.8 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் மண்பாண்டம் தயார் செய்யும் மின்விசை கருவிகள் வழங்கப்பட்டன.

412 மண்பாண்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ளனர். தொழிலாளர்கள் பூந்தொட்டி, சாமி சிலைகள், பொம்மைகள் ஆகியவைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காருகுறிச்சியில் மண்பாண்ட தொழிலாளர் நலச் சங்க கட்டிடங்கள் ரூ.60 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ளன. இந்த கட்டிடத்தில் பணிக்கூடாரங்கள், மூலப்பொருட்களை சேமித்து வைக்கவும், மண்பாண்டங்களை உலர வைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கணக்கெடுக்கும் பணி

இதன் மூலம் மண்பாண்ட தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்க்கை தரம் மேம்படுத்திட கதர் வாரியம் மூலம் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் தொழிலாளர்கள் விடுபடாமல் பெயர் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்