சென்னையில்திருவொற்றியூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

திருவொற்றியூரில் செல்போனை பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2018-08-29 23:37 GMT
பெரம்பூர்,

திருவொற்றியூரில் நேற்று காலை சாலையில் செல்போனில் பேசி கொண்டு நடந்து சென்ற ஒருவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் செல்போனை பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள், அந்த நபர்களை மடக்கிப் பிடித்து திருவொற்றியூர் போலீசில் ஒப்படைத்தனர்.

அதில் அவர்கள் இருவரும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தெரிந்தது. அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்