மாவட்டத்தில் 4 நாட்கள் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்கள் கலெக்டர் தகவல்
சேலம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்கள் 4 நாட்கள் நடக்கிறது என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க., தி.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:-
1.1.2019-ஐ தகுதி நாளாக கொண்ட சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் வருகிற 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 31.12.2000 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்த (18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்) அனைவரும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.
தகுதி வாய்ந்த அனைவரும் படிவம்-6 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் அளிக்கலாம். வருகிற 8 மற்றும் 22-ந் தேதி, அக்டோபர் மாதம் 6 மற்றும் 13-ந் தேதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வாசிக்கப்பட உள்ளது.
மேலும் மாவட்டத்தில் வருகிற 9 மற்றும் 23-ந் தேதி, அக்டோபர் மாதம் 7, 14-ந் தேதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்கள் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உரிய வாக்காளர் பட்டியல் விவரங்கள் மற்றும் போதுமான படிவங்களுடன் மையங்களில் இருந்து புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பங்களை பெற உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட சிலர் பேசும் போது, ‘தேர்தலின் போது மின்னணு வாக்கு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர மாநில தேர்தல் ஆணையத்துக்கு கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளன. அந்த பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர். கட்சிகளின் நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.