செட்டாப் பாக்ஸ்கள் பெற சந்தாதாரர்களின் விவரங்களை நாளைக்குள் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை பெற கேபிள் ஆப்ரேட்டர்கள் நாளை(வெள்ளிக் கிழமை)க்குள் சந்தாதாரர்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.
தர்மபுரி,
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் வழங்கி ஆணையிட்டது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சரால் டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் டிஜிட்டல் ஒளிபரப்பிற்கான விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
தர்மபுரி மாவட்டத்தில் 703 உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்களும், 1 லட்சத்து 54 ஆயிரத்து 815 சந்தாதாரர்களும் உள்ளனர். இதுவரை 45 ஆயிரத்து 160 விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1 லட்சத்து 9 ஆயிரத்து 655 சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சந்தாதாரர்களின் விவரங்களை சந்தாதாரர் விண்ணப்ப படிவம் மூலம் கேபிள் ஆபரேட்டர்கள் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த பணியினை நாளை (வெள்ளிக்கிழமை) க்குள் முடிக்க வேண்டும். நாளைக்குள் பதிவு செய்யும் கேபிள் ஆபரேட்டர்களுக்கு மட்டுமே விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. கேபிள் ஆபரேட்டர்கள், சந்தாதாரர்களின் விவரங்களை பதிவு செய்வதற்கான வசதி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு பொது இ-சேவை மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அனைவரும் சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கிட நாளைக்குள் சந்தாதாரர்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.