திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் கலெக்டர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
2019 ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக செப்டம்பர் 1-ந் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
2019 ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளராக சேர தகுதி உடையவர்கள் ஆவர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் செப்டம்பர் 1-ந் தேதி முதல் அக்டோபர் 31-ந் தேதி வரை ஆகும்.
வாக்காளர் பட்டியல் சேர்த்தல், நீக்கல், திருத்தம் குறித்த சிறப்பு முகாம் செப்டம்பர் மாதம் 9, 23 மற்றும் அக்டோபர் 7, 14 ஆகிய நாட்களில் நடைபெறும். மேலும் செப்டம்பர் மாதம் 8, 22 மற்றும் அக்டோபர் 6, 13 ஆகிய நாட்களில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் படிக்க பெறும்.
சிறப்பு முகாம்கள் நடை பெறும் நாட்களில் அந்தந்த வாக்கு சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களும் ஒருங்கிணைந்து வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள் விடுதல்கள் போன்றவற்றை கண்டறிய வேண்டும்.
அரசியல் கட்சியினர் இதுவரை வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகள் ஏதேனும் இருப்பின் அவற்றுக்கு உடனே வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமனம் செய்து அதன் விவரத்தை உரிய படிவத்தில் தெரிவிக்க வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் நாள் ஒன்றுக்கு 10 விண்ணப்பங்கள் மட்டுமே அளிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் நடைபெறும் நாட்ககளில் ஒரு வாக்குச்சாவடி முகவர் 30 விண்ணப்பங்கள் மட்டுமே அளிக்க இயலும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, உதவி கலெக்டர்கள் முருகதாஸ்(திருவாரூர்), பத்மாவதி(மன்னார்குடி), தனி தாசில்தார் சொக்கநாதன் (தேர்தல்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.