ஏரியூரில் வர்த்தகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஏரியூர் வர்த்தகர் சங்கத்தினர், ஏரியூர் கடை வீதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஏரியூர்,
ஏரியூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம், சாக்கடை கால்வாய் அமைத்தல், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மட்டுமே ஓரளவு முடிந்துள்ளதாகவும், சாக்கடை கால்வாய் பணி பாதியில் நிற்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் கடைகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஏரியூர் வர்த்தகர் சங்கத்தினர், ஏரியூர் கடை வீதியில் சாக்கடை கால்வாய் மீது நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.