வானவில் : பவர் ஷூட் கேமரா
சாகச பயணங்கள், மலையேற்ற பயணங்களில் ஈடுபடுபவர்கள் தங்களுடன் சின்ன கேமராவையும் எடுத்து செல்வதுண்டு.
தீபெட்டியை விட சற்று பெரிதாக இருக்கும் கேமராவை தலைகவசம், தோள்பட்டை பகுதிகளில் பொருத்தி கொள்வார்கள்.
சாகச அனுபவங்களை பதிவு செய்ய விரும்புவோருக்கு ஏற்ற கேமரா இதுவாகும். பவர் ஷூட் 4 கே எஸ்2 சீரிஸ் என்ற பெயரில் இந்த கேமரா விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ. 2,999 ஆகும். ஆன்லைன் மூலம் இதை வாங்க முடியும். இந்தியாவிற்குள் இது கட்டணமில்லாமல் டெலிவரி செய்யப்படும்.
170 டிகிரி வைட் ஆங்கிள், நீருக்கடியில் 30 மீட்டர் வரை படம் பிடிக்க உதவும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. நீர் புகா தன்மை (Water proof) இதன் சிறப்பம்சமாகும். வை-பை இணைப்பு மூலம் செயல்படுத்த முடிவதால் இதில் எடுக்கப்படும் படங்களை செல்போனுக்கோ அல்லது உங்களது கம்ப்யூட்டருக்கோ மாற்றிக் கொள்ளலாம். இந்த கேமராவுடன் வாட்டர் புரூப் கேஸ், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது படம் பிடிக்க உதவும் பைக் ஸ்டாண்ட், முக்கோண ஸ்டாண்டை (டிரைபாட்) நிலை நிறுத்த உதவும் கிளிப், ஹெல்மெட் பேஸ், பேண்டேஜ் செய்ய நைலான் கேபிள், டேப், யு.எஸ்.பி. கேபிள், பவர் அடாப்டர், பேட்டரி, கையேடு, கேமரா துடைக்கும் துணி ஆகிய அனைத்தும் இந்த கேமராவுடன் கிடைக்கும்.
இதில் 12 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. ஆப்டிகல் ஜூம் 5 எக்ஸ் என்ற அளவில் உள்ளது. இது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்படும்.
இதில் வீடியோ பதிவுகளும் எடுக்க முடியும். வீடியோக்கள் ஹெச்.டி. தரத்தில் இருக்கும். ஒரு பிரேமில் 30 எப்.பி.எஸ். (FPS) வரை காட்சிகள் பதிவாகும். இதன் பிளாஷ் மெமரி 512 எம்.பி. ஆகும். இதில் எஸ்.டி. கார்டு இணைத்துக் கொள்ளலாம். இதன் நினைவகத் திறனை 16 ஜி.பி. வரை நீட்டித்துக் கொள்ள முடியும். இது பேட்டரியில் செயல்படக் கூடியது. லித்தியம் அயான் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த கேமராவுக்கு ஓராண்டு உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.